முன்னாள் இலங்கை அதிபரின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவுக்கு, இலங்கை நிதி மோசடி தடுப்பு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
கொழும்பு கல்கிசை என்ற இடத்தில் அதிக பெறுமதியான காலியிடத்தை மிக குறுகிய தொகைக்கு வாங்கிய மோசடிக்காகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் பல இடங்களில் அதிக பெறுமதியுடைய விலை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கினார்கள் என ராஜபக்சேவின் மகன்களான நாமல் ராஜபக்சவும், யோசித்த ராஜபக்சவும் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.