இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக 6 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, முக்கிய அரச ஆணைகளில் கையொப்பமிட்டார்.
அதன்படி, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட அவர், டாஸ்மாக் கடைகள் இனி காலை 10 மணிக்கு பதில் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
இதன் மூலம் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.