கலிங்கப்பட்டினத்தில் இருந்து 40 கி.மீ. தெற்கு - தென்கிழக்காக ரோணு மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரைப் பக்கமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த ரோணு புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று 21ம் தேதி மாலை அல்லது 22ம் தேதி அதிகாலையில் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரோணு வங்கதேசம் நோக்கி நகர்ந்தாலும், வடக்கு கடற்கரையோர ஆந்திரா, ஒடிசா பகுதிகளுக்கு புயல் ஆபத்து எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.