ஓடிஸா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த 'சர்வதேச பொருளாதாரமும் இந்தியாவும்' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசுகையில், "இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும், வங்கிகளின் நிலைமைகளை சீர் செய்வதும் அவசியமாகும். மேலும், பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவர அரசியல் ரீதியாக கடினமாக இருக்கிறது என்றும் சர்வதேச சந்தை வீழ்ச்சி, 2 முறை வறட்சி என்றபோதிலும் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சிப் பெற்றுள்ளது" என்றார்.