நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்று பணநாயம் வென்று விட்டது என பாமக நிறுவனர் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், தொண்டர்களால் இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, இதனால், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாந்தாங்கல் கிராமத்தில் பா.ம.கவினர் 50 பேர் தோல்வி காரணமாக, அங்குள்ள முருகன் கோயில் மரத்தடியில் நேற்று மொட்டை அடித்துக் கொண்டனர்.