அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 7ம் திகதி அமெரிக்க சொல்லவுள்ளார்.
கடந்து இரண்டு ஆண்டுகளில் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
ஜூன் 7ம் திகதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கும் மோடி, பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பால் ரியான் அழைப்பின்பேரில், அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் உரையாற்றும் 5வது இந்திய பிரதமர் மோடி ஆவார்.
அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, ஜூன் 4ம் திகதி 2 நாள் பயணமாக அவர் கத்தார் செல்ல இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.