ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க இருந்த 450 மில்லியன் டாலர்களை நிறுத்தி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளது அமெரிக்க மக்களவை.
ஏற்கனவே, அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நிதியை தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சரியான முறையில் பாகிஸ்தான் பயன்படுத்த வில்லை; அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை கைது செய்யாதது; ஒசாமாவை காட்டிக் கொடுத்த ஷகில் அப்ரிடியை விடுதலை செய்யாதது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.