தமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து பாமக, பாஜக வேட்பாளர்கள் உட்பட 5 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.