வரும் 27 ஆம் தேதி ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சால் சீர் குலைந்த ஹிரோஷிமா நகருக்கு செல்லவுள்ளார்.
அங்கு அணுகுண்டு வீசப்பட்டதன் பின்னர் செல்லும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா தான். 1945ல் நடந்த அணுகுண்டு வீச்சுக்காக அமெரிக்கா சார்பில் தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஒபாமா கூறினார்.
பெருவாரியான ஜப்பான் நாட்டு மக்கள் ஒபாமாவிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.