தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு பலத்த அடி கிடைத்தது. அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையும் விரைவில் பறி கொடுக்கவுள்ளது.
இந்நிலையில் வைகோ, திருமாவளவன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.