2 நாள் பயணமாக ஈரான் சென்ற பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு தலைவர் அதிபர் ஹசன் ரெளஹானியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஈரானின் சாப்ஹார் துறைமுகத்தை இந்திய உதவியுடன் மேம்படுத்துவது, ரயில் பாதை அமைப்பது, அலுமினிய உருக்காலை அமைப்பது உள்ளிட்டவை முக்கிய இடம் வகித்தன. பின்னர் இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் 12 முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தான நிலையில், ஈரான் பயணத்தை வெற்றிகரமாக முடித்த மோடி இன்று இந்தியா திரும்பியுள்ளார்