லிபியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சண்டையில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் கொல்லப்பட்டதால், அங்கு மேலும் பதற்றம் நிலவி வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை அங்கு இந்தியர்கள் யாரும் செல்ல கூடாது என இந்திய மத்திய வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 3 ஆம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.