மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்குகள் பெரும் இழுபறியில் இருந்து வருகிறது.
தேர்வு குறித்து அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது பல மாநில எம்பிகள் கொடுத்த நெருக்கடியில் மத்திய அரசு திக்குமுக்காடி இருந்தது.
இதனால் இன்று டெல்லியில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தேசிய அளவிலான மருத்துவ பொதுத்தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலும் இன்று அளிக்கப்பட்டுள்ளது.