மத்திய அறிவியல் மற்றும் இயர்க்கை மையம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ், பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருள்கள் இருப்பது தெரிந்ததால் விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.