10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 ம் தேதி முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப் படவுள்ளன. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த நாள் விவரங்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.