முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் திமுக சார்பாக கலந்து கொண்ட முக.ஸ்டாலினுக்கு நன்றி கூறி எழுதிய கடிதத்தில், பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டதற்கு நன்றி. விதிகளின்படி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பகுதியில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாக அறிகிறேன்.
அவரையோ திமுகவையோ அவமதிப்பது அரசுக்கு நோக்கமல்ல. ஸ்டாலின் கலந்து கொள்வது முன்னரே தெரிந்து இருந்தால் முதல் வரிசையில் இடம் ஒதுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பேன். ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.