அசாம் சட்டசபையின் 126 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 4 மற்றும் 11 ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில் பாஜக வெற்றி பெற்று, அசாமில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக பதவியேற்கும் சர்பானந்தா சோனோவாலுக்கு ஆளுநர் ஆச்சார்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சர்பானந்தாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.