மாவீரர்களை வணக்கம் செய்வதற்காக தமிழம் முழுவதும் கடந்த 27 ம் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன இந்த நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்திய உணர்வாளர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களது விபரங்களை கியூ பிரிவு காவல்துறை திரட்ட தொடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பில் தமிழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பாகங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலி செயற்பாடுகள் மீள தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என தமிழகத்தின் கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான நபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாவீரர் தின பிரச்சார நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.