கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த காவல்துறை மோதல்கள் பட்டியல்
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் காவல்துறை மோதல்கள் (என்கவுண்டர்) என்ற பேரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்:
1998: சென்னையில் நடந்த மோதலில், ரவுடி ஆசைத்தம்பி, அவரது கூட்டாளி .
2002: பெங்களூருவில் பதுங்கியிருந்த இமாம் அலி கூட்டாளிகள் ஐந்து பேர்.
2003: சென்னையில் வெங்கடேச பண்ணையார். அதே ஆண்டு சென்னையில் ரவுடி வீரமணி.
2004 அக்., 18: சந்தனமரக் கடத்தல் வீரப்பன்.
2007 ஆக. 1: ஓசூர் அருகே வெள்ளை ரவி, கூட்டாளி குணா .
2008 ஏப்., 11: தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஜெயக்குமார் அவரது கூட்டாளி. அதே ஆண்டு ஜூலை 11ல் ரவுடி பாபா.
நவ.16ம் தேதி, ஆறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த "கொர' கோபி என்ற கோபி.
2010ம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகளை கொலை செய்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன்.
2010 நீலாங்கரை பகுதியில் திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட இருவர்.
2012 பிப்., 23: சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர்.
2012 நவ., 30: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு, பாரதி சுட்டுக்கொலை.
இந்த மோதல்களில் காவல்துறையே மோதல்கள் என்ற பேரில் போலியாக ஒரு சம்பத்தை சித்தரித்து பலரை சுட்டுக் கொன்றுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.