Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தம்பி அறிவழகன் (பெயருக்குப் பின்னால் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் என்று எதுவும் நீங்களாக கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல) அவனுடைய பெயருக்கு ஏற்றார் போலவே அறிவும் அழகும் நிறைந்த இளைஞன். அவரிடம் (இப்போது 'அவன்' ஒரு பெரிய மனிதர். ஆகையால் 'அவர்' என்றே குறிப்பிடலாம்) எனக்கு பிடித்ததும் பிடிக்காததுமாய் சில குணங்கள். பிடித்த குணம் என்னவென்றால், அவரின் பொறுமை. என்ன வேலை கொடுத்தாலும் மிகவும் பொறுமையாக செய்வார். அதாவது, இழுத்தடித்து செய்வது என்று கூட வைத்துக் கொள்ளலாம். உதாரணமாய், வீட்டின் ஒரு இடத்தை சுத்தம் செய்ய சொல்கிறீர்கள் என்றால் காலையிலிருந்து இரவு வரை துடைத்துக் கொண்டே இருப்பார். துடைக்கும் போது ஏதேனும் துண்டுக் காகிதம் சிக்கிவிட்டால் காகிதத்தின் கதி அதோ கதிதான். அவர் கூர்ந்து படிப்பது கண்டு காகிதத்தில் உள்ள எழுத்துகளே ஓடி ஒளிந்து கொள்ளும். ஒரு எழுத்தைக் கூட விடாமல் வரி வரியாக படித்து முடித்து விட்டுதான் துடைப்பதைத் தொடருவார். இப்போது அவரிடம் எனக்கு பிடிக்காத பழக்கம் என்னவென்பது உங்களுக்கும் புரிந்திருக்கும். நாளாக நாளாக அவரின் படிக்கும் குணம் அபாய கட்டத்தை தாணடி விட்டது. டிக்கெட்டின் பின் உள்ள சிற்சில எழுத்துக்களையும், தபால் தலை அச்சில் உள்ள கருப்பு எழுத்துக்களைக் கூட விடாமல் படித்ததில் அவரின் அறிவு உலக அளவில் விரிவடைந்து விட்டது. இப்போது அவர் தமிழின் பெருவாரியான நூல்களை படித்து முடித்துவிட்டார். எழுத ஆரம்பித்தால் நீங்கள் பெரிய எழுத்தாளராகி விடுவீர்கள்; எழுதுவதில் உங்களுக்கு விருப்பம் உண்டா?  என்று நான் கேட்ட போது சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கல்கி தொடங்கி தபு சங்கர் வரைக்குமான எல்லா நூல்களையும் கரைத்துக் குடித்து தமிழின்பம் பெற்றவர், தமிழ் இலக்கிய உலகிற்கோ, இரா.எட்வின் செய்து கொண்டிருப்பது போல் தமிழ் இணைய உலகிற்கோ எதுவும் திருப்பி செய்யவில்லை. தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று அப்பாவியாக வாழும் அறிவழகனுக்கு வயது 23 தான் ஆகிறது. அவர் ஏன் ipp
[vuukle-powerbar-top]

Recent Post