தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததால் ஈழத் தமிழகம் அமையவில்லை என திமுக
தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின்
80வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.
இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்த வேண்டும் என 1961 ஆம் ஆண்டே ஐநா சபைக்கு அண்ணா கடிதம்
எழுதியதை கருணாநிதி சுட்டிக்காட்டினார்.
ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டுமானால், தமிழர்களின் ஒத்துழைப்பும் தேவை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.