மணிரத்னம் இயக்கிவரும் "கடல்"படத்தின் பாடல்கள் உரிமையை "சோனி"இசை நிறுவனம் பெற்றுள்ளது.இப்படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே "கடல்" படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள "நெஞ்சுக்குள்ளே"என்ற பாடல் அண்மையில் இணையம் வாயிலாக வெளியாகியிருந்தது.வைரமுத்துவின் வைர வரிகளில் இப்பாடலை பாடியிருந்தார் ஷக்தி ஸ்ரீ கோபாலன்.
இப்பாடலுக்கு இரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களையும் பற்றிய விபரங்கள் அண்மையில் வெளியாகியிருந்தது.
"நெஞ்சுக்குள்ளே", "சித்திரை நிலா","நீ இல்லையேல்" "மூங்கில் தோட்டம்" "மகுடி மகுடி" மற்றும் "ஏலே கீச்சான்" ஆகிய பாடல்களே "கடல்" படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களும் ஆகும்.இப்பாடல்கள் அனைத்தும் வைரமுத்து மற்றும் அவருடைய மகன் மதன் கார்க்கி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன.
இப்படத்திற்கான முதல் கட்ட புகைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.அதை பார்த்தபோது நிச்சயம் தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக் மற்றும் துளசி நாயர் முக்கிய இடத்தை பிடிப்பார்கள் என்பது மிக தெளிவாக தெரிந்தது.
இவர்கள் இருவரோடு அர்ஜுன்,அரவிந்த சாமி,பொன்வண்ணன், பசுபதி,தம்பி ராமையா மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.