Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் அரசுக்கு பின்னடைவு ஏற்படாது ~ கமல்நாத்

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்படாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா தொடர்பான விவாதம் இந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறவுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று அவர் கூறினார். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது கடினமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் ஃபெமா சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெற வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்த கருத்தை அவர் மறுத்துள்ளார்.

ஃபெமா சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையின் ஒப்புதல் கிடைத்தாலே போதுமானது என்று அமைச்சர் கமல் நாத் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post