Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நார்வே தம்பதியருக்கு நீதி வேண்டும் : உறவினர்கள்

மகனை கண்டித்ததற்காக நார்வேயில் கைது செய்யப்பட்ட இந்திய தம்பதியின் உறவினர்கள், உரிய நீதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திரசேகர் வல்லபாநேனி மற்றும் அவரது மனைவி அனுபமா, அவர்களது ஏழு வயது மகன் ஸ்ரீராம் தெரிவித்த புகாரின் பேரில் கடந்த 26 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

குழந்தையிடம் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் சட்டப்படி, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைதண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு கோரி வருகிறது.

இந்த வழக்கில் ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post