யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றும் இன்றும் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணையினை அடுத்து 3 மாத விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது மாவீரர் நாளை நடாத்தியமை, சிறி ரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீசினர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பதில் துணைவேந்தர் வேல்நம்பி தெரிவிக்கையில் பத்திரிகைகள் உங்கள் அரசியல் இலாபத்திற்காக செயற்படுகிறீர்கள் உங்களுக்கு நான் தகவல் தர மாட்டேன் எனக் கூறி தொலைபேசியினைத் துண்டித்துக் கொண்டார் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற இந்த நிலமையினை முன்னின்று அவர்களது விடுதலைக்கு முதற்படியாக இருக்கும் இவர்களே இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது.