சென்னையில் அதிமுக கவுன்சிலர் மீது பா.மக.வினர் தாக்குதல் நடத்தியதாக கூறி அதிமுகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை ராமாபுரத்தில் நேற்று இரவு சைக்கிள் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்து தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கும், பாமகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைத் தொடர்ந்து சம்பத்துக்கு ஆதரவாக 155வது வார்டு அதிமுக கவுன்சிலர் சேகரும், ராஜேந்திரனுக்கு ஆதரவாக பாமக முன்னாள் கவுன்சிலர் ரவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் சேகரை பாமகவினர் தாக்கியதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளசரவாக்கம் காவல் நிலையத்தை 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போரூர் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால், வளசரவாக்கம், போரூரில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.