சென்னையில் பல இடங்களில் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இராயபுரம், பிராட்வே, கிண்டி, நங்கநல்லூர், தாம்பரம் பகுதிகளிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவலினை அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.