
இலங்கையில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“1987ம் ஆண்டு இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, இலங்கையில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் செல்லுவும் என்று லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.
அப்போது அவர் ஒரு அரச பணியாளராக இருந்தார்.
அதனால் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருந்தது.
இலங்கையின் வரலாற்றிலேயே ராஜபக்ச அரசாங்கம் தான் மிகவும் பலம் வாய்ந்தது என்றும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்ச அரசுக்கு தமிழ்த் தேசியக கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.