Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்களின் ஜனநாயக செயற்பாடுகளில் படையினர் தலையிடக்கூடாது யாழில் ஆர்ப்பாட்டம்!

மாணவர்களினதும் பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் படையினரும் காவல்துறையினரும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நாளை மறுதினம் 4 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.

மாணவர்களினதும் பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் படையினரும் காவல்துறையினரும் தலையிடக் கூடாது எனக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து செயற்படுவார்கள்.
தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27 திகதி படையினரும் காவல்துறையினரும் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி பிரவேசித்து பல்கலைக்கழக மாணவர் மாணவியர்களைத் தாக்கியுள்ளனர். மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நடாத்திய அமைதியான செயற்பாட்டை மேற்கொண்டபோது அதனை குழப்பியதுடன் கண்மூடித்தனமாக அவர்களைத் தாக்கியும் உள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவங்களை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கடமைகளைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டிக்கும் முகமாக எதிர்வரும் திங்கள் கிழமை மூன்றாம் திகதி ஓர் அமைதியான போராட்டத்தை நடாத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த இருபத்தோழாம் திகதியே அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.



மரணித்த எமது உறவுகளை நினைவுகூர்வதை தடுப்பதற்கு எவருக்கும் எந்த நியாயமுமில்லை. இதே நேக்கத்துக்காக எதிர்வரும் செவ்வாக்கிழமை நான்காம் திகதி ஓர் ஆர்ப்பாட்டம் பேரணியை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு விடுத்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை ஒரே நாளில் ஒருங்கிணைந்து நடாத்துவதே பொருத்தமானதாகவும் வினைத்திறனானதாகவும் இருக்குமெனவும் கருதப்படுவதால் எல்லோரும் சேர்ந்த நாளை மறுதினமே நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



எனவே கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல பொதுநிறுவனங்களும் பொது அமைப்புகளும் பொதுமக்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாடுகளில் படையினரும் காவல்துறையினரும் தலையிட்டதை கண்டிப்பதும் அவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோருவதுடன் பல்கலைக்கழக மாணவர்களதும் பல்கலைக்கழகத்தினதும் சிவில் சமூகத்தினதும் ஜனநாயக செயற்பாடுகிலும் படையினரும் காவல்துறையினரும் தலையிடக் கூடாது எனவும் கோரி நிற்க ஒன்று சேர வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.
மேலும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரையும் மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் கோருவதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post