Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தொழிற்கூடங்கள் நிறைந்த நரேலா என்ற பகுதியில் அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து 10 வண்டிகளில் வந்த மீட்புப் படை வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதி தீயில் முற்றிலுமாக எரிந்தது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் சம்பவ இடத்திற்கு உடனே வர முடியவில்லை என தீயணைப்புத் துறையினர் விளக்கமளித்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் புகை மண்டலம் உருவானது.
[vuukle-powerbar-top]

Recent Post