காவிரி விவகாரத்தில் தண்ணீர் தேவை குறித்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கர்நாடக அணைகளில் தற்போது 37 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 37 டி.எம்.சி. தண்ணீரில் 28 டி.எம்.சி. குடிநீருக்காக தேவைப்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பதினைந்து நாட்களில் 30 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும் என்ற அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.