வைரஸ் காய்ச்சலால் இன்று மட்டும் திருச்சி மற்றும் தேனி மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் ஜான் பீட்டர்.
காய்ச்சல் காரணமாக கடந்த ஒருவார காலாமாக அவதிப்பட்டு வந்த இவர், திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு 30 பாட்டில்கள் வரை ரத்தம் ஏற்றப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் ஜான்பீட்டர் உயிரிழந்தார். டெங்கி காய்ச்சல் காரணமாகவே ஜான் உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், காய்ச்சல காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 6ம் வகுப்பு மாணவி கார்த்திகாவும், லாரி ஓட்டுனர் சிக்கந்தர் என்பவரும் உயிரிழந்தனர்.