இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவி பொதுமக்களை பல்வேறு சட்டங்களின் பேரில் தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது காவல்துறை.
அதில் ஒரு அங்கமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனக் கூறி நஷ்ரீன் தேவசகாயம் மற்றும் லூர்த்து சாமி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இன்று வேலூர் சிறையிலிருந்து சென்னையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டுள்ள மேற்படி இரண்டு நபர்களையும் மாலை 2 .30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி கைது செய்யப்பட்டுள்ள லூர்த்து சாமிக்கு ஆதரவாக முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகார் எம்.ஜி.தேவசகாயம் வாதாடவுள்ளார் அதேபோல் நர்ஷீன் தேவசகாயம் அவர்களுக்கு ஆதரவாக கொளத்தூர் மணி வாதாடவுள்ளார்.
இவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் கூடன்குள சென்னை எதிர்பாளர்கள் சார்பாக நித்யானந் ஜெயராமன்( எழுத்தாளர்), "பூ உலகின் நண்பர்கள்" சார்பில் ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன் ஆகியோர் அங்கு கூடியுள்ளனர்.