நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தல்களில், நேர்மையான, தகுதியான வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்கப் போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றார்.
அரசியலில் ஈடுபட விரும்பவில்லைஎன்று கூறிய அவர், கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கியது சிறப்பானது என்றார்.
தங்கள் இருவரின் வழிகள் வேறு வேறாக இருந்தாலும், இலக்கு ஊழல் இல்லாத இந்தியாவாகவே இருப்பதாகவும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பாளர்கள் தகுதியானவர்களாக இருந்தால், அவர்களுக்காக தான் பிரசாரம் செய்து, அவர்களை பதவியில் அமர்த்துவேன் என்றும் ஹசாரே மேலும் கூறினார்.