நவம்பர் 2 : பிரீமோன்ட், வட கலிபோர்னியா
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள பிரீமோன்ட் நகரில்,இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது, வட கலிபோர்னியா தமிழர்கள் (Tamils of Northern California) என்ற அமைப்பால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. முதலில் மாவீரர் பாடல்கள் ஒலிக்கப்பட்டது, பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்பு எல்லோரும்,மாவீர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ச்சியாக செல்வி.யாழினி தமிழர் எழுச்சி பாடல்களை பாடினார். உணர்வாளர்களால் மாவீரர்களை தியாகங்களை போற்றியும்,தமிழ் ஈழத்தை வென்றெடுப்பது குறித்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்வை திருமதி.நளாயினி தொகுத்து வழங்கினார். தமிழக தமிழர்கள் சார்பாக இளந்தமிழர் அணியின். திரு.சாகுல் அமீது, திரு.தியாகராஜன், திரு.தில்லை குமரன், திரு கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாகவும். உணர்வு பூர்வமாகவும் அமைந்திருந்தது.
செய்தி : நவீன் மதனகோபால்,