Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது, 480 மெகாவாட்டிலிருந்து உற்பத்தியை அதிகரிக்கும் போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மீண்டும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் இந்த கோளாறு சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அனல் மின்நிலையத்தில், நிலக்கரி சுமந்து செல்லும் பிரதான கன்வேயர் பெல்ட் இன்னும் அமைக்கப்படாததால், ஏற்கனவே, இயங்கி வரும் பழைய பெல்ட் வாயிலாக நிலக்கரி எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post