நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உளவுப்பிரிவு அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு பணிகள் தொடங்கிவிட்டன.
சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக பயணிகளின் உடமைகள் அனைத்தும் நீண்ட பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து ரயில்களும் சோதனையிடப்பட்ட பின்னரே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன.