மீசாலையில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 30 ஏக்கர் நிலப்பரப்பு, மீள ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை நம்பி அங்கு சென்ற காணி உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மீசாலை, இராமாவில் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் காணியை இலங்கைப் படையினர் கடந்த 16 ஆண்டுகளாக தமது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளனர்.
முன்னர் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த காணி உரிமையாளர்களான சுமார் 60 குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்படவில்லை.
அதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னர், தனியார் காணிகளில் உள்ள படைமுகாம்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதும், இதுவரை, இந்தப் படைத்தளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 30ம் நாள் இந்தக் காணிகளை உரியவர்களிடம்
இலங்கை இராணுவத்தினர் ஒப்படைக்கவுள்ளதாக, யாழ். மனிதஉரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் கனகராஜ் அறிவித்திருந்தார்.
இதனை நம்பி காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற உரிமையாளர்களை இலங்கைப் படையினர் உள்ளே நுழைய விடாமல் விரட்டியுள்ளனர்.
அதேவேளை, இந்தக் காணிகளில் இருந்து இலங்கைப் படையினருடன் இணைந்து சிலர் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக உரிமையாளர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.