Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வருகின்ற 7ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா பகுதிகளில் வருகின்ற 7ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் திண்டுக்கலில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் இத்தகவலை தெரிவித்தார்.

காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முழு அடைப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

இதே தினத்தில் தொடருந்து மறியல், பேருந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post