அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இலங்கையின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வொசிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, றொபேட் ஓ பிளேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச உங்களைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாக கூறியுள்ளார்.
அதற்கு பிளேக், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.
எனினும், அந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்படவில்லை.
அதற்கான காரணம் தமக்குத் தெரியவில்லை என்று ஒரு தகவல் கூறுகிறது.
அதேவேளை, கடந்த புதன்கிழமை காலையே மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரது பயணத்திட்டம் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை மாலையே கொழும்பு திரும்பியிருந்தார்.
நியுயோர்க்கில் இருந்து அவர் கொழும்பு திரும்பியதால் தான் பிளேக்குடனான சந்திப்பு நடக்கவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.