தாய்நாட்டினை கடந்து வாழும் ஈழத்தமிழர்களினால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன், பல்வேறு துறைசார் வல்லுனர்களை கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் நான்காவது நாடாளுமன்ற அமர்வு பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்றது.
மேலவை உறுப்பினர்களும் முதன்முறையாக இந்த நேரடி அமர்வில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். இந்த அமர்வானது எதிர்வரும் ஞாயிற்றுகிழமை [02-12-2012] வரை இடம்பெறுகின்றது.

கடந்த வியாழக்கிழமை [29-11-2012] உத்தியோகபூர்வமாக தொடங்கிய தொடக்க அமர்வில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இது புலம்பெயர்ந்தோர் அரசியலில் சிறப்பானதொரு விடயமாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்திருந்தது.
அனைத்துலக மனித உரிமைவாதியும் சட்டவாளருமான கரன் பார்க்கர், பேராசிரியர் பீற்றர் சால்க், முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் எவன்ஸ் உட்பட பல பிரதிநிதிகள் சிறப்பு அதிதியாக இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.