Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகத் தமிழர்களின் முகநூல் குழுவில் ஊடுருவியுள்ளதா தமிழக 'கியூ' உளவுப் பிரிவு?

உலகத் தமிழர் இணைய இணைப்பின் முகநூல் பக்கப் படம்.
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி உலக தமிழர் இணைய இணைப்பு நிர்வாகத்தால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கூடங்குளத்தில் நடத்தப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளும் மாவீரர் நாளும் மிகவும் சிறப்புற நடந்தேறியது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் குறித்து தமிழக உளவுப் பிரிவு தகவல் சேகரித்து வருவதாக முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம். (http://www.newsalai.com/2012/12/blog-post_9281.html)

உலக தமிழர் இணைய இணைப்பு எனும் முகநூல் குழுவில் சிங்களவர்கள் நுழைந்து உளவு பார்த்தது அனைவரும் அறிந்ததே. தற்போது சிங்களத்திற்கு பிறகு  தமிழ் நாட்டு உளவுப் பிரிவான கியூ பிரிவு ஊடுருவியுள்ளதாக ஈழ வேங்கை இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக தமிழர் இணைய இணைப்பு பக்கத்திலும் செய்தி ஒட்டி (Pinned Post) வைக்கப்பட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி பின்வருமாறு: 

"இன்றைய உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்ற சூழலில் பல மக்கள் சமுக வலைத்தளங்களையே நாடுகிறார்கள். அந்த வகையில் உலகில் முன்னணியில் நிற்கும் சமுக வலைத்தளமான பேஸ் புக்கில் நாளுக்கு நாள் உலகில் பல தமிழர்களும் இணைந்து கொண்டு பல செய்திகளை அறிந்து கொள்கிறார்கள்.

முன்னணி சமுக வலைத்தளமான இந்த பேஸ் புக்கில் உலக தமிழர் இணைய இணைப்பு என்ற ஒரு குழுவை புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களே நடத்தி வருகிறார்கள் இந்த குழுவில் கிட்டத்தட்ட 80,000க்கு மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இணைந்து கொண்டு பல செய்திகளை நாளுக்கு நாள் அறிந்து கொள்கிறார்கள் இந்த குழுவில் இருக்கும் நிர்வாகிகள் தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் வசிக்கும் பல தமிழர்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினம் தினம் இந்த குழுவில் பல தமிழர்கள் இணைந்து கொண்டு வருவதை பார்த்தும் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் பின்பு மேலோட்டமாக இந்த குழுவை அவதானித்து வந்த சிங்களமும் தமிழின துரோகிகளும் தற்போது இந்த குழுவை அழிக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகிறார்கள். 

கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி உலக தமிழர் இணைய இணைப்பு நிர்வாகத்தால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கூடங்குளத்தில் நடத்தப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளும் மாவீரர் நாளும் மிகவும் சிறப்புற நடந்தேறியுள்ளதை அடுத்து சிங்களமும் தமிழின துரோகிகளும் ஆடிப்போயுள்ளர்கள். இந்த நிலையில் தான் தற்போது இவர்களுடன் தமிழ் நாட்டு உளவு பிரிவான கியூ பிரிவும் இணைந்துள்ளது.

தமிழின விடுதலைக்காக போராடி கொண்டு வரும் ஈழத்தமிழர்களை இந்திய அரசு மூலம் சிங்களத்திற்கு காட்டி கொடுத்து வரும் தமிழ் நாட்டு கியூ பிரிவு இன்று சமுக வலைத்தளங்கள் மூலம் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்குள்ளும் ஊடுருவிள்ளர்கள்.

அன்று தொடக்கம் இன்று வரை ஈழத்தமிழர்களின் போராட்டங்களை தமிழ் நாட்டு உளவு பிரிவான கியூ பிரிவு இந்திய அரசு மூலம் சிங்களத்திற்கு காட்டி கொடுத்த ஒரு சில சம்பவங்கள்.

கேணல் கிட்டு உட்பட பன்னிரு வேங்களைகளையும், குமரப்பா புலேந்திரன், குட்டிமணி தங்கதுரை மற்றும் இறுதி கட்ட போரின் போதும் தமிழக மக்களின் உணர்வுகளை காவல்துறை மூலம் அடக்கி இந்தியன் என்ற மாயையில் இருந்து தன் இனத்தையே சிங்களத்திற்கு காட்டி கொடுத்த ஈனப்பிறவிகள் தான் இந்த தமிழ் நாட்டு உளவுப் பிரிவான கியூ பிரிவு.

கூடன்குள மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சமுக வலைத்தளங்களில் ஒன்றான (பேஸ் புக் குழு) உலக தமிழர் இணைய இணைப்பையும் இப்போதில் இருந்து இவர்கள் மிகவும் உன்னிப்பாக கண் காணித்து வருகிறார்கள். தமிழின உணர்வாளர்கள் போல் செயற்பட்டு வரும் இவர்களை முதலில் விரைவாக இனம் காணுவோம்.

உலக தமிழர் இணைய இணைப்பில் ஊடுருவி இருக்கும் இவர்களை விரைவில் இனங்கண்டு மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது உலக தமிழர் இணைய இணைப்பின் நிர்வாகிகளின் கடமையாகும்."

இவ்வாறு உலக தமிழர் இணைய இணைப்பு வெளியிட்டிருக்கும் செய்தி கூறுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post