தூக்கை தூக்கிலிட முன்னிற்கும் கிருஷ்ணய்யர் |
தூக்குத் தண்டனை எதிர்ப்புக் குழுவின் தலைவர் திரு.கிருஷ்ண ஐயர் அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா சென்னை சர்.பி டி தியாகராய அரங்கத்தில், நடைபெற்றது. சாதாரணமாக பிறந்த நாள் விழா போல் அல்லாமல், கிருஷ்ண ஐயர் வாழ் நாள் குறிக்கோளை பிரதிபலிக்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. செல்வராஜ் முருகையன் அவர்களின் ஆவணப் படம் முன்னோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர். கிருஷ்ண ஐயர் இந்தியாவில் கொடுக்கப்படும் தூக்குத்தண்டனையை பல்வேறு வழிகளில் கடுமையாக எதிர்த்து வருபவர் ஆவார். முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த இவர் மேற்கொண்ட முயற்சி, குறிப்பிடத்தக்கது ஆகும்.
படம் நன்றி: ஸ்ரீனிவாஸ் திவாரி