இதுதொடர்பாக வாஷிங்டனில் பேசிய தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஜெஃப்ரே யாட், இந்திய அரசின் அணுவிபத்து இழப்பீடு சட்டம், அணு மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக இருப்பதாக கூறினார்.
அணு உலை விபத்து ஏற்பட்டால் மூலப்பொருள் விற்பனையாளர்கள் இழப்பீடு கொடுக்க இந்த சட்டம் வகைசெய்வதால் இந்திய சந்தைக்குள் நுழைவதில் சிக்கல் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அணு மூலப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அமெரிக்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இத்தகைய சிக்கல்களை தீர்ப்பது குறித்து சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இந்தியா ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வலியுறுத்தினார்.