"துப்பாக்கி" படத்தின் கதையானது இஸ்லாமிய சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனக்கூறி இப்படத்தை எதிர்த்து வரும் இஸ்லாமிய இரசிகர்களுக்கு,ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்,தமிழ் சினிமா இயக்குனரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவென்றால்,நடிகர் விஜய் எல்லா மதத்தையும் மதிப்பவர் என்றும்,இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை ஒரு போதும் அவர் அலட்சியம் செய்யமாட்டார் என்றும் கூறியுள்ளார்.அத்தோடு எல்லா இஸ்லாமிய தாய்மார்களும் தங்களுடைய மகனாக விஜய்யை நினைத்து அவரை ஆசீர்வதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதோடு மட்டும் நின்றுவிடாத சந்திரசேகர் ஒரு சிறு துணுக்கு ஒன்றையும் கூறிச் சென்றுள்ளார். அதாவது விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார் என்றும், 1995 இல் வெளிவந்த "சந்திரலேகா"படத்தில் விஜய் இஸ்லாமியராக நடித்த ரஹீம் என்ற கதாபாத்திரத்தையும் இவ்வேளையில் தான் நினைவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.