Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஸ்பெக்ட்ரம் விலை குறைந்ததற்கு சி.ஏ.ஜி தான் காரணம்: கபில் சிபல் மறைமுக சாடல்!

"Telecom is a proud growth story but something happened in 2007-08 which started a trend, emasculating the hen that laid the golden egg," Kapil Sibal said.
இன்று டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், கபில் சிபல் கூறுகையில், 

"2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசு எதிர்பார்த்த வருவாய் ஈட்ட முடியாமல், ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது. இப்படி ஆகும் என்று நான் ஏற்கெனவே கூறினேன். இந்தத் தோல்வி மத்திய தணிக்கைத்துறை அதிகாரியான சி.ஏ.ஜியின் முடிவால் ஏற்பட்டது.

எதை வைத்துக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விற்றிருந்தால் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்திருக்கும் என்று சி.ஏ.ஜி கூறினார் என்பது தெரியவில்லை.

கொள்கை முடிவுகள் எடுக்கும் பணியை அரசிடம் விட்டு விட வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண்டும். 2ஜி குறித்து செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டதால், தொலைத் தொடர்புத் துறைக்கு சரிவுதான் ஏற்பட்டுள்ளது.

பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த இந்தத் துறை சிதைந்து போய் விட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படிதான் 2ஜி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் மிகக் குறைந்த வருவாயாக ரூ.9,407 கோடி கிடைத்ததற்கு சி.ஏ.ஜியே காரணம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை இழப்பீடு குறித்து தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டது இப்போது தெளிவாகிவிட்டது. இதனால் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இப்போது விலை போகாத மண்டலங்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படும்" என்றார். இதன் மூலம், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளி வரக் காரணமான சி.ஏ.ஜியையே சாடியுள்ளார் கபில் சிபல்.
[vuukle-powerbar-top]

Recent Post