Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி வன்முறையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சாதி வன்முறையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து எஸ் டி பி ஐ கட்சி ஆர்ப்பாட்டம் 

தருமபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய வன்முறை நடத்தப் பட்டதை கண்டித்தும், தென் மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களை கட்டுப் படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் சென்னையில் இன்று மாலை நினைவரங்கம் முன்பு நடைபெற்றது. 

கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை  தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் ரவிக்குமார்,  தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, பேராசிரியர் ஆ. மார்க்ஸ் , எஸ் டி பி ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

கண்டன உரையில் அக்கட்சியினர் தெரிவித்ததாவது,

தலைவர்களின் குரு பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு இப்படிப்பட்ட கலவரங்களும், பதட்டங்களும் நீடிப்பது வருந்தத் தக்கது. இவ்வாறு ஏற்படுவது அந்தந்த தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதையாகும். ஆண்டுதோறும் குரு பூஜை நிகழ்சிகள் பதட்டத்தையே ஏற்படுத்துகின்றன. அரசு இந்நில்கல்சிகளை ஊக்குவிக்கக் கூடாது. தேவைப்பட்டால்  எந்த சமுதாயமும் குரு பூஜைகளை நடத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும். தருமபுரி மற்றும் தென் மாவட்டங்களில் இரு சமூக மக்களும் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ வேண்டும் . அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

















[vuukle-powerbar-top]

Recent Post