அஜித் குமாரின் படங்களான "தீனா","ஏகன்"," பில்லா" மற்றும் "பில்லா 2 " ஆகிய படங்களுக்கு இசையமைத்த பெருமை யுவன் ஷங்கர் ராஜாவுக்கு உண்டு.அந்த நட்பின் தொடர்ச்சியாக யுவன் வாங்கியிருக்கும் புதிய "அஸ்டன் மார்டின்" மோட்டார் வாகனத்தை பார்த்தது மட்டுமல்லாது அதை எவ்வாறு பராமரிப்பது போன்ற விடயங்களை மிக துல்லியமாக அவருக்கு எடுத்துரைத்துள்ளார் அஜித்.
ஒரு நாள் முழுவதும் தன்னுடன் இருந்த யுவனுக்கு உலங்கு வானூர்தியின் பாகங்களை எவ்வாறு மாற்றியமைப்பது குறித்து சிறு விளக்கமும் அளித்துள்ளார் அஜித்.இது குறித்து கருத்து தெரிவித்த யுவன், உண்மையிலேயே மோட்டார் வாகனங்கள் குறித்த அஜித்தின் திறைமை மிக அபாரமானது என்றும்,மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் அஜித்துக்கு நிகர் அஜித்தே என பாராட்டியும் தள்ளிவிட்டார்.
யுவன் வாங்கியிருக்கும் "அஸ்டன் மார்டின்" மோட்டார் வாகனம் சென்னை சாலைகளுக்கு பொருத்தமானதாக அமையாது என்பதுவும் அஜித்தின் கருத்தாகும்.