சென்னை அருகிலுள்ள சேலையூரில் சமீபத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி சுருதி, அப்பள்ளி பேருந்தின் ஓட்டையில் தவறி விழுந்து உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனியார் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, தனியார் பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவதற்கு 21 கட்டுப்பாடுகளை விதித்து கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் 8 கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.