"துப்பாக்கி" திரைப்படம் திரைக்கு வந்ததன் பின்னர் அனைவரது கண்ணும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீது திரும்பியுள்ளது.அவரின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையப்போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளனர் இந்திய சினிமா வல்லுனர்கள்.
இந்நிலையில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இந்தியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் முருகதாஸ்.இது "துப்பாக்கி" படத்தின் இந்தி மொழியாக்கப்படமாக அமையவுள்ளது.
இதற்கிடையே அஜித் குமாரை மீண்டும் இயக்கும் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முருகதாஸ், நிச்சயமாக அஜித்துடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதில் தனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததாகவும்,அவர் ஒரு மிகப் பெரிய நட்ச்சத்திரமாக இருந்த வேளையில் ஒரு புதுமுக இயக்குனராக தான் வந்தபோது தன்னுடன் பணியாற்ற எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும், இப்போது கூட அவருடைய தொடர்பு தனக்கு இருப்பதாகவும் கூறினார்.அஜித் சரி என ஒரு வார்த்தை சொன்னால் அவருக்கான கதையை உடனடியாக நான் தயார் செய்து விடுவேன் என மிக உறுதியுடன் கூறியிருந்தார் முருகதாஸ்.
முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த "தீனா" படம் அஜித்தின் சினிமா வாழக்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.